Satish-TD | Date: Sunday, 24/06/2012, 12:04 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 62
Status: Offline
| படம் ரிலீசாகிறதோ இல்லையோ... நாளொரு செய்தியில் நமீதாவைப் பார்த்துவிட அல்லது படித்துவிட முடிகிறது. காரணம், இன்னும் கிராமப்புறங்களில் நமீதாவின் கவர்ச்சிக்கு உள்ள செல்வாக்கு!
நமீதாவுக்கு வரும் ஆசை ரொம்பவே விசித்திரமாக இருக்கும்.
அப்படித்தான் ஒரு நாள், ஏதோ ஒரு கடைத் திறப்பு விழாவுக்குப் போனவர், திடீரென வழியில் நடந்த கிராமத்து ஜோடியின் திருமணத்தில் ஆஜராகி அத்தனை பேருக்கும் இன்ப அதிர்ச்சி தந்தார்.
ஏன் இப்படி? என்று கேட்டதற்கு,
"நடிகை என்றால் என்ன நானும் சராசரிப் பெண்தானே... என்னை மாதிரி ஒரு பிரபலம் அழையா விருந்தாளியாகப் போய் நின்றால், இந்த கிராமத்து எளிய மனிதர்கள் எப்படி சந்தோஷப்படுவார்கள்... அந்த சந்தோஷத்தைப் பார்க்க விரும்பினேன். அவ்வளவுதான்," என்றார்.
கூடவே தனது வினோத ஆசை ஒன்றையும் சொன்னார்.
ஒரு நாள் மதுரைப் பக்கம் காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி குப் குப்பென்று புகை விட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தாராம். ஆனால் அது பீடியோ சிகரெட்டோ இல்லை. வண்டியை நிறுத்திவிட்டு, அந்த பாட்டியிடம் போய், நீங்கள் குடிப்பது என்ன? என்று கேட்க, அவரோ, "இது சுருட்டு தாயீ.. ஒரு இழுப்பு இழுக்கிறியா?" என்று கேட்டாராம்.
"சுருட்டுன்னா என்னா' உதவியாளரைக் கேட்டேன். அவர் 'சிகார்' என்று கூறியதும், அப்போதைக்கு வேண்டாம் என்று கூறிவிட்டேன். ஆனால் அங்கிருந்து வந்த பிறகு, அந்த சுருட்டை ஒரு முறை பிடித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. ஒரே ஒரு முறைதான்!", என்றார்.
நல்ல ஆசை போங்க...
|
|
| |