Satish-TD | Date: Sunday, 24/06/2012, 12:01 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 62
Status: Offline
| பெண் சூப்பர் இயக்குநர் ஃபராகானும், இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். படத்துக்கு தலைப்பு ‘ஹேப்பி நியூ இயர்' இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ஃபரா கான், ஷாருக்கான் இணைந்து உருவாக்கிய மே ஹூன் நா, ஓம் ஷாந்தி ஓம் படங்கள் சூப்பர்ஹிட். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஷாருக்கை தவிர்த்து வேறு ஹீரோக்களை நாடினார் ஃபரா கான். இருவரும் இனி இணைய மாட்டார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் இதோ மீண்டும் ஒன்றாக படம் எடுக்கின்றனர். ஃபராகானின் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பதாலும், இதுவரை நடித்த படங்களிலிருந்து இப்படத்தின் கதை முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார் ஷாருக்.
இந்தாண்டு இறுதியில் தொடங்க உள்ள இந்தப் படத்தை ஷாருக்கானே தயாரிக்கிறார், ஹேப்பி நியூ இயர் படத்தில் மொத்தம் ஐந்து ஹீரோக்களாம். இந்த திரைப்படத்தில் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது ஃபரா கானின் ஆசை.
இந்த திரைப்படத்தில் ஷாருக் தவிர்த்து பொம்மன் இரானியை மட்டுமே உறுதி செய்திருக்கிறார் ஃபரா கான். மற்ற மூன்று பேர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அபிஷேக் பச்சன் நடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
|
|
| |
Balukl-TD | Date: Sunday, 24/06/2012, 6:11 PM | Message # 2 |
Lieutenant
Group: Administrators
Messages: 50
Status: Offline
| Thanks For Sharing . . . .
|
|
| |