விஷாலுக்கும் சரத் மகள் வரலட்சுமிக்கும் 'லவ்வோ லவ்' என்று ஊரெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதில் பெட்ரோலே ஊற்றுகிறது ஒரு செய்தி.
அது, விஷால் நடிக்கும் மத கஜா ராஜா - எம்ஜிஆர் படத்தில் அவருக்கு ஜோடியாக வரலட்சுமியே நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ செய்திதான்.
இந்த செய்தியை வெளியிட்டுள்ளவர் படத்தின் இயக்குநர் சுந்தர் சி மனைவியும் தயாரிப்பாளருமான குஷ்பு!
இந்தப் படத்துக்கு ஹீரோயின் மாறுவது இது மூன்றாவது முறைய. முதலில் இந்தப் படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கார்த்திகா. ஆனால் கதையை மாற்றிவிட்டார்கள் என்று புகார் கூறிவிட்டு, படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டார்.
அடுத்து டாப்ஸி ஒப்பந்தமானார். ஏனோ விஷாலுக்கு அவருடன் நடிப்பதில் இஷ்டமே இல்லையாம்.
இந்த நிலையில்தான் தன் மனம் கவர்ந்த வரலட்சுமியையே படத்தின் ஹீரோயினாக்கிவிட்டார் விஷால் என்கிறார்கள்.
ஏகப்பட்ட திறமைகளை வைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் தனக்கு ஒரு பிரேக் கிடைக்காதா என காத்திருந்தார் வரலட்சுமி. சிம்புவின் போடா போடியில் இவர் நடிக்க ஆரம்பித்திருந்தாலும், அந்தப்படம் இப்போதைக்கு வருவதாக தெரியவில்லை.
எனவே மதகஜாராஜா - எம்ஜிஆர், வரலட்சுமிக்கு முதல் தமிழ்ப்படமாக அமையவிருக்கிறது!
நிஜ காதலுடனே சேர்ந்து நடிப்பது இன்னும் சேஃப்தானே!