டேவிட்' என்ற இந்திப் படத்தில் விக்ரம் நடிப்பது குறித்து ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்தப் படம் குறித்து இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் விக்ரமும் நடிகர் ஜீவாவும் இணைந்து நடிக்கின்றனர். இரண்டு தனிக் கதைகளைக் கொண்டதாக படம் உருவாகியுள்ளது.
இந்த இரண்டு கதைகளையும் இரண்டு கேமிரா மேன்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
கதைப்படி இரு டேவிட்கள். ஒருவர் விக்ரம், மற்றொருவர் ஜீவா. ஒரு டேவிட் மீனவராகவும் மற்றொரு டேவிட் இசைக் கலைஞராகவும் வருகிறார்கள்.
இருவரும் ஒரு சிக்கலை சந்திக்கின்றனர். அதனை அவர்கள் எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதுதான் இப்படத்தின் கதை. விக்ரம்,ஜீவா ஆகியோரோடு நாசர், தபு, ரோகினி ஹட்டங்காடி, லாரா தத்தா, இஷா ஷெர்வானி, கே.பி.நிஷான், ஜான் விஜய் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மீனவர் கதையை ரத்னவேலுவும் இசை கலைஞர் கதையை ஸ்ரீஜல் ஷாவும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.