தொலைக்காட்சி தொடரில் வரும் திருமணத்திற்காக நிஜ திருமண வரவேற்பு போல பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்றினை மக்கள் முன்னிலையில் நடத்தி அசத்தியுள்ளனர் விஜய் டிவி நிறுவனத்தினர்.
அந்த தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8.30 மணிக்கு சரவணன் - மீனாட்சி என்ற நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் நாயகன், நாயகி இடையே திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமணம் பற்றி எதிர்பார்ப்பு இந்த தொடரை பார்ப்பவர்களிடையே அதிகரித்துள்ள நிலையில் மக்கள் முன்னிலையில் நிஜ திருமண வரவேற்பு ஒன்றினை நடத்தி அசத்தியுள்ளனர் விஜய் டிவி. இந்த நிகழ்ச்சி ஞாயிறுக்கிழமை ஒளிபரப்பானது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நகைச்சுவை பேச்சாளர் ரோபோ சங்கர் தொகுத்து வழங்கினார். கதையின் நாயகர்கள் சரவணன் - மீனாட்சி பிரம்மாண்டமான மேடையில் நிற்க அவர்களுக்கு போட்டிகளும் நடைபெற்றன. இருவரும் தங்களின் திருமணநாளன்று போடுவதற்கான உடைகளையும், நகைகளையும் ஒரே கருத்துடன் தேர்ந்தெடுத்து ரசிகர்களின் பாராட்டினை பெற்றனர்.
இந்த திருமண வரவேற்பில் சின்னத்திரை நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமிழக தொலைக்காட்சி வரலாற்றிலேயே நெடுந்தொடர் ஒன்றில் நடைபெற உள்ள திருமணத்திற்காக ரிசப்ஷன் நடத்தப்பட்டது இதுவாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிட
த்தக்கது.