Satish-TD | Date: Monday, 25/06/2012, 1:32 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 62
Status: Offline
| அஜீத் நடித்துள்ள பில்லா 2 படம் வரும் ஜூலை 13-ம் தேதி வெளியாவதாக படத்தின் தயாரிப்பாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட அரங்குகளில் படம் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த மே மாதத்திலிருந்தே இதோ அதோ என இழுத்தடித்துக் கொண்டிருந்தது. சில தினங்களுக்கு முன் படம் சென்சார் செய்யப்பட்டபோது, ஏ சான்று கொடுத்துவிட்டனர். ஏராளமான காட்சிகளை வெட்டியும் விட்டனர்.
இதனால் பட வெளியீடு திட்டமிட்டபடி ஜூன் 21-ம் தேதி நடக்கவில்லை. மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப்போய்விட்டது.
இந்த நிலையில், படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
"ஆவலுடன் எதிர்ப்பார்த்த தல ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க வருகிறது பில்லா 2. அனைத்து வேலைகளும் முடிந்து பக்கா ஆக்ஷன் த்ரில்லராக வரும் ஜூலை 13-ம் தேதி பில்லா 2ஐ வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான அரங்குகளில் பில்லா 2 திரையிடப்படும். உலகம் முழுவதும் வெளியாகவுள்ள திரையரங்குகள் விவரம் விரைவில் வெளியிடப்படும்," என்று கூறியுள்ளார்.
|
|
| |