Satish-TD | Date: Sunday, 24/06/2012, 12:05 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 62
Status: Offline
| அஜீத் குமாரின் பில்லா 2 படம் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா ஆகியோர் நடித்துள்ள பில்லா 2 படம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. சென்சாருக்கு போன இடத்தில் பல இடங்களில் கை வைக்கப்பட்டது. மேலும் 'ஏ' சான்றிதழ் கிடைத்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி இந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டே போகிறது. ஜூன் 22ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் கார்த்தியின் சகுனி அதே நாளி்ல் ரிலீஸானதால் படத்தின் வியாபாரத்தை கணக்கில் கொண்டு ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜூன் 29ம் தேதியும் படம் ரிலீஸ் இல்லையாம். மாறாக வரும் ஜூலை மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமையன்று படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.
ஜூலை 13லாவது ரிலீஸ் செய்துவிடுவார்களா என்று அஜீத் ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.
இதற்கிடையே விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத பட ஷூட்டிங் பெங்களூரில் நடந்தது. இதில் அஜீத் குமார் கலந்து கொண்டார். இந்த செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்துவிட்டார்களாம். அவர்களை கட்டுப்படுத்துவதற்குள் போலீசாருக்கு போதும், போதும் என்றாகிவிட்டதாம்
|
|
| |