Satish-TD | Date: Sunday, 24/06/2012, 11:17 AM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 62
Status: Offline
| ரஜினியின் மெகா ஹிட் படமான முரட்டுக்காளையை ரீமேக் செய்து மூக்குடைபட்டதைக் கூட அதற்குள் மறந்துவிட்டு, அடுத்து சகலகலா வல்லவனை ரீமேக் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பவர் சூர்யா!
1982-ம் வருடம் ஏ.வி.எம். தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் சகலகலா வல்லவன். இப்படத்தில் கமல் கிராமத்துவாசி, பட்டணத்துவாசி என இரு வேடங்களில் அசத்தியிருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருந்தார்.
கதை ஒன்றும் புதிதில்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் - சரோஜாதேவி நடித்த பெரிய இடத்துப் பெண் படத்தைத்தான் சகலகலா வல்லவனாக்கியிருந்தார்கள்.
ஆனால் படத்தின் பெரிய பலம் இசைஞானி இசை. தமிழ் சினிமாவில் எந்த மசாலா படத்துக்கும் அமைந்திராத அளவு மெகாஹிட் பாடல்கள்.
இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சூர்யா விருப்பம் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இப்படத்தை தாங்களே ரீமேக் செய்வதாக ஏவிஎம் அறிவித்துள்ளது.
இதுபற்றி அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளனர் ஏவிஎம் நிறுவனத்தினர்.
தமிழ் சினிமாவில் இந்த அளவுக்கா கதைப் பஞ்சம் தலைவி
Message edited by sathish - Sunday, 24/06/2012, 11:18 AM |
|
| |
Balukl-TD | Date: Sunday, 24/06/2012, 11:21 AM | Message # 2 |
Lieutenant
Group: Administrators
Messages: 50
Status: Offline
| Thanks For Sharing . . . .
|
|
| |